மண்ணின் ஈரம்

Thursday, November 17, 2011 , 3 Comments




பாலையில் ஈரம் சுரக்கலியே,
மேகம் இன்னும் கருக்கலியே,
அண்ணாந்து பாத்தும், அதரம் பெருகலியே,
எறங்கி வரத்தான் மனசும் வல்லையே ....

எட்டடி எடுத்து வைச்சேன்,
மிஞ்சியும் போட்டு  அழகு பாத்தேன்,
மஞ்சள் அரைச்சு முழுகியாச்சுது 
மானம் கறுத்து மழையும் ஆச்சுது...

மச்சான் வரக்காலியே,
மண்ணு மனம் போகலியே,
மனசு முழுக்க நெறஞ்சிருக்க,
நெருங்கி வர நான் துடிக்க....

மனுஷனை இன்னும் காணோமே 
விளக்கு வைக்க நாழி ஆச்சுதே 
வஞ்சி நெஞ்சம் தாங்கலையே,
இந்த கள்ளன் மனம் இறங்கலையே...

தலைவாழை இலை போட்டேன்,
தண்ணி சொம்பு பக்கம் வைச்சேன்,
நெய் சோறு ஆறுதே,
நடு நிசி ஆகுதே...

மாரியாத்தா நான் பொங்கல் வைக்கேன்
ஆடு வெட்டி விருந்து வைக்கேன் 
என் புருஷன் வீடு வர அருள்புரி அம்மா!
என் மனசு குளிர வரம் குடுடி அம்மா....

Viji

Some say he’s half man half fish, others say he’s more of a seventy/thirty split. Either way he’s a fishy bastard. Google

3 Candles:

Vasu. said...

Good one viji if we can bear the grammatical errors..:)

Unknown said...

Awesome, Viji. I loved it absolutely :P

Viji said...

Thanks vasu for pointing out and correcting them too :)
@Kiran Happy that you loved it :)

wisdom comes with experience

At one, I learnt crawling was fun. At forty one, I still feel crawling is fun #blamemykneesnotme